நியூசிலாந்து அணியை அசிங்கப்படுத்திய கவாஸ்கர்.. வெட்கி தலைகுனிந்த ஸ்காட் ஸ்டைரிஸ்

By karthikeyan VFirst Published Jan 29, 2019, 3:37 PM IST
Highlights

நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சிறுமைப்படுத்தும் விதமாக கவாஸ்கர் கிண்டலடித்தார். அதைக்கேட்ட நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் மனக்குமுறலை நமுட்டு சிரிப்பின் மூலம் மறைக்க முயன்றார். 
 

நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சிறுமைப்படுத்தும் விதமாக கவாஸ்கர் கிண்டலடித்தார். அதைக்கேட்ட நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் மனக்குமுறலை நமுட்டு சிரிப்பின் மூலம் மறைக்க முயன்றார். 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் ஆடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றிலுமே வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. 

முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் மூன்றாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளிலுமே நியூசிலாந்து அணி மீது இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது. 3 போட்டிகளில் ஒரு சூழ்நிலையில் கூட அந்த அணி, இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்தவோ, நெருக்கடி கொடுக்கவோ இல்லை. மூன்றாவது போட்டியில் டெய்லர் - லதாம் பார்ட்னர்ஷிப் மட்டும் தான் அந்த அணியின் குறிப்பிடத்தகுந்த ஆட்டம்.

குல்தீப்பும் சாஹலும் நியூசிலாந்து பேட்டிங் வரிசையை சரித்துவிட்டனர். போட்டிக்கு தலா 6 விக்கெட்டுகள் வீதம் இருவரும் இணைந்து முதல் 2 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரு அணிகளுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்தது இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்தான்.

அந்த அணியின் தொடக்க ஜோடி கப்டில் - முன்ரோ டோட்டல் வேஸ்ட். இவர்கள் இருவரும் 3 போட்டிகளில் ஒன்றில் கூட சோபிக்கவில்லை. அந்த அணியின் மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை வீரர்கள் நன்றாக பேட்டிங் ஆடினாலும் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய இன்னிங்ஸை ஆடி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. அவர்களை பார்ட்னர்ஷிப்பே அமைக்கவிடாமல் இந்திய பவுலர்கள் பார்த்துக்கொண்டனர். 

பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, பேட்டிங்கும் அபாரமாக ஆடியது. ஒரு போட்டியில் கூட பின்வரிசை பேட்ஸ்மேன்கள் இறங்க வேண்டிய சூழல் உருவாகவில்லை. இப்படியாக ஒட்டுமொத்தமாக அந்த அணியின் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி. 

மூன்றாவது போட்டி முடிந்த பிறகு, புவனேஷ்வர் குமாரிடம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தற்போதைய வர்ணனையாளர்களுமான கவாஸ்கர் மற்றும் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் உரையாடினர். அப்போது நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை சிறுமைப்படுத்தும் விதமாக கவாஸ்கர் கிண்டலடித்து விட்டார். 

புவனேஷ்வர் குமாரிடம், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலையில் பந்துவீசுவது உங்களுக்கு கடினமாக இருந்ததா? அல்லது நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு களத்தில் வீசுவது கடினமாக இருந்ததா? என்று நியூசிலாந்து அணியின் பேட்டிங்கை படுமோசமாக கிண்டலடித்தார். இதைக்கேட்ட ஸ்காட் ஸ்டைரிஸ், தனது நாட்டு அணியை இந்தளவிற்கு கிண்டல் செய்யும் நிலை உருவாகிவிட்டதே என்ற மனக்குமுறலை நமுட்டு சிரிப்பில் மறைக்க முயன்றார். 
 

click me!