நம்ம பையன் கில்கிறிஸ்ட் மாதிரி.. கவாஸ்கர் புகழாரம்!! ஏன் அப்படி சொன்னாருனு தெரியுமா..?

By karthikeyan VFirst Published Oct 16, 2018, 12:21 PM IST
Highlights

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் கவாஸ்கர் ஒப்பிட்டுள்ளார். 
 

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் கவாஸ்கர் ஒப்பிட்டுள்ளார். 

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட், எதைப்பற்றியும் கவலைப்படாமல் பயமே என்பதையே அறியாமல் தனக்கே உரிய பாணியில் ஆடி, ரன்களை குவித்துவருகிறார். 

சஹாவின் காயத்திற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பரை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் கிடைத்த வரப்பிரசாதம் தான் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம்பிடித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அருமையாக ஆடி, இரண்டு முறை 92 ரன்களில் அவுட்டானார். இரண்டு சதங்களை தவறவிட்டது சற்று வருத்தம்தான் என்றாலும், அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது. அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அனுபவ வீரர் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து அருமையாக ஆடி இந்திய அணியை நல்ல நிலைக்கு அழைத்து சென்றார். 

அந்த இன்னிங்ஸில் 92 ரன்கள் குவித்து சதமடிக்க முடியாமல் அவுட்டானார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையை விதைக்கும் விதமாக பிரித்வி ஷா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு இளம் வீரர்கள் கிடைத்துள்ளனர். 

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், பண்ட் ஆடும் விதத்தை பார்க்கையில், அவர் ஆட்டத்தை ரசித்து ஆடுவதை அறிய முடிகிறது. ரிஷப் மிகச்சிறந்த வீரர். 6வது வீரராக களமிறங்கி அசத்தலாக ஆடுகிறார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட்டும் ஆறாவது வரிசையில்தான் இறங்குவார். ஆஸ்திரேலிய அணி மிகக்குறைந்த ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இக்கட்டான சூழலில் களமிறங்கி, அதிரடியாக ஆடி சதமடித்து அந்த அணியை சரிவிலிருந்து மீட்டு 350 முதல் 400 ரன்களை எட்டவைத்துவிடுவார் கில்கிறிஸ்ட். அதேமாதிரியான வீரர் தான் ரிஷப் பண்ட் என்று கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.

click me!