ஆஸ்திரேலியாவில் அசத்தப்போகும் ஸ்பின்னர் இவர்தான்!! கவாஸ்கர் தடாலடி

By karthikeyan VFirst Published Oct 7, 2018, 1:58 PM IST
Highlights

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் இளம் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் இளம் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ், இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் அணியில் அறிமுகமானார். அந்த தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய குல்தீப் யாதவ் முதல் இன்னிங்ஸில் பெரிதாக சோபிக்கவில்லை. குல்தீப்பின் பவுலிங்கை பாலும் சேஸும் அடித்து ஆடினர். 

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் குல்தீப். இரண்டாவது இன்னிங்ஸில் பவல், ஹோப், ஹெட்மயர், ஆம்பிரிஷ் மற்றும் சேஸ் ஆகிய 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிரட்டினார். இந்நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் குல்தீப் யாதவ் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

குல்தீப் யாதவ் குறித்து இந்தியா டுடேவிற்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில், முதல் இன்னிங்ஸில் குல்தீப்பின் பந்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்து ஆடினர். உடனடியாக இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழுந்தார் குல்தீப். இரண்டாவது இன்னிங்சில் வித்தியாசமான லெந்த்தில் வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். எதிரணி வீரர்கள் தனது பவுலிங்கை அடித்து துவைத்து எப்படிப்பட்ட தண்டனை கொடுத்தாலும் அதையெல்லாம் தாங்கும் தைரியம் கொண்டவராக உள்ளார் குல்தீப் என்று பாராட்டியுள்ளார். 

மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து பேசியுள்ள கவாஸ்கர், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்சாகும், பந்து நன்றாக திரும்பவும் செய்யும். குறிப்பாக ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஆதிக்கம் செலுத்துவர். அதை நாம் ஷேன் வார்னே விஷயத்தில் பார்த்திருக்கிறோம். இதை மனதில் வைத்து தேர்வுக்குழு செயல்பட வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. அது சிறிய மைதானம் என்பதால் குல்தீப்பின் பவுலிங்கை அடித்து ஆடக்கூடும். எனவே அந்த போட்டியில் சேர்க்கவில்லை என்றாலும் மற்ற டெஸ்ட் போட்டிகளில் குல்தீப்பை ஆட வைக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!