அவருக்கு அதிக மரியாதை கொடுக்காமல் அடிச்சு நொறுக்குங்க!! கோலிக்கு தாதா சொல்ல மறுத்த அறிவுரை

By karthikeyan VFirst Published Dec 20, 2018, 1:22 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இடையே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு மெசேஜ் அனுப்ப நினைத்து, ஆனால் அனுப்பாமல் விட்டது குறித்து மனம் திறந்துள்ளார் முன்னாள் கேப்டன் கங்குலி. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இடையே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு மெசேஜ் அனுப்ப நினைத்து, ஆனால் அனுப்பாமல் விட்டது குறித்து மனம் திறந்துள்ளார் முன்னாள் கேப்டன் கங்குலி. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளின் ஆட்டத்திற்கு இடையேயான பெரிய வித்தியாசமாக அமைந்தது நாதன் லயனின் பவுலிங் தான். 

இந்திய வீரர்கள் நாதன் லயனின் சுழலில் சிக்கி திண்டாடுகின்றனர். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் என மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் முடிவை தீர்மானித்ததே நாதன் லயன் தான். 

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலியை, இதுவரை ஆடியுள்ள நான்கு இன்னிங்ஸ்களில் இரண்டு முறை வீழ்த்தியுள்ளார் லயன். இதுவரை லயனின் பவுலிங்கில்தான் கோலி அதிகமுறை அவுட்டாகியுள்ளார். இப்படியாக இந்திய அணிக்கு மாபெரும் பங்களிப்பை அளிக்கும் கோலிக்கு லயன் அச்சுறுத்தலாக திகழ்வதுதான் போட்டியின் முடிவை மாற்றிவிடுகிறது. 

நாதன் லயனின் பந்துவீச்சில் இந்திய அணி திணறும் நிலையில், அவரை சமாளிப்பது குறித்து கோலிக்கு ஒரு மெசேஜை அனுப்ப நினைத்துள்ளார். ஆனால் அந்த மெசேஜை கோலிக்கு கங்குலி அனுப்பவில்லை. இதுகுறித்து இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள கங்குலி, கோலிக்கு ஒரு மெசேஜ் அனுப்ப நினைத்தேன். ஆனால் இதுவரை அந்த மெசேஜை அனுப்பவில்லை. அவரிடம் என்ன சொல்ல நினைத்தேன் என்றால், இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியே ஆடும்போது ஸ்பின்னர்களிடம் அதிக விக்கெட்டுகளை இழக்கக்கூடாது. நாதன் லயன் நல்ல பவுலர் தான். ஆனால் அவருக்கு அதிக மதிப்பளித்து அவரது பந்தை அடித்து ஆட பயந்து தடுப்பாட்டம் ஆடக்கூடாது. லயனின் பவுலிங்கை தடுத்து ஆடாமல் அடித்து ஆடி 300 முதல் 350 ரன்களை குவிக்க வேண்டும் என்று மெசேஜ் செய்ய நினைத்தேன். ஆனால் செய்யவில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

ஒருவேளை கங்குலி இந்த மெசேஜை அனுப்பியிருந்தால், அது லயனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடும் இந்திய வீரர்களுக்கு உத்வேகமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும். 

click me!