பார்முலா 1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் முதல் இடம் பிடித்து அசத்தல்...

Asianet News Tamil  
Published : May 14, 2018, 10:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
பார்முலா 1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் முதல் இடம் பிடித்து அசத்தல்...

சுருக்கம்

Formula 1 car racing England player Lewis Hamilton takes the first place ...

பார்முலா 1 கார் பந்தயத்தின் 5–வது சுற்றில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) முதல் இடம் பிடித்தார்.

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5–வது சுற்றான ஸ்பெயினிஷ் கிராண்ட்பிரி பந்தயம் பார்சிலோனாவில் உள்ள ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 

309.952 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம்போல 10 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்டார் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி). 

இவர் 1 மணி 35 நிமிடம் 29.972 வினாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றதுடன் அதற்குரிய 25 புள்ளிகளையும் தட்டிச் சென்றார்.  இந்த சீசனில் அவரது 2–வது வெற்றி இதுவாகும். 

அவரை விட 20.593 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 2–வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். 

மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) 3–வது இடத்தையும், செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) 4–வது இடத்தையும் பிடித்தனர். போர்ஸ் இந்தியா வீரர் செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) 9–வதாக வந்தார். 

விபத்து மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6 வீரர்கள் இலக்கை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் கம்பேக் கொடுத்த ஷமி.. இந்திய அணிக்கு கிடைத்த குட் நியூஸ்..!
முகமது ஷமிக்கு பிடித்த அசைவ உணவு இதுதான்; 1 கிலோ இல்லாமல் திருப்தி அடையாதாம்!