2018ல் மரண அடிகளை வாங்கிய ஆஸ்திரேலியா!! டீம் செலக்‌ஷனையும் தேர்வாளர்களையும் தெறிக்கவிட்ட டீன் ஜோன்ஸ்

By karthikeyan VFirst Published Jan 25, 2019, 12:25 PM IST
Highlights

இங்கிலாந்திடம் 5-0 என ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது, பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடர் தோல்வி, சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது என கடந்த ஆண்டில் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது அந்த அணி. எந்த வகையிலும் 2018 அந்த அணிக்கு நல்லவகையில் அமையவில்லை. 
 

கிரிக்கெட்டில் பொதுவாகவே எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடும் ஆஸ்திரேலிய அணி, எல்லா காலக்கட்டத்திலும் வெற்றிகரமான அணியாகவே திகழ்ந்துள்ளது. ஆனால் 2018ம் ஆண்டு அந்த அணிக்கு பெரும் சோகமான ஆண்டாக அமைந்துவிட்டது.

2018ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி பல படுதோல்விகளை சந்தித்ததோடு கடும் சரிவையும் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்தது. அந்த தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகிய மூவருக்கும் தடை விதிக்கப்பட்டது. ஸ்மித் மற்றும் வார்னரின் தடைக்கு பிறகு அந்த அணி பாதாளத்திற்கு சென்றது. 

இங்கிலாந்திடம் 5-0 என ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது, பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடர் தோல்வி, சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது என கடந்த ஆண்டில் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது அந்த அணி. எந்த வகையிலும் 2018 அந்த அணிக்கு நல்லவகையில் அமையவில்லை. 

தொடர் தோல்விகள் அந்த அணியை துவண்டு போக செய்துள்ளன. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, தன்னம்பிக்கையிழந்து காணப்படுகிறது. இந்த கடும் சரிவிற்கு அந்த அணியின் அணி தேர்வாளர்கள்தான் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. 

ஸ்டீவ் வாக், ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங், மிட்செல் ஜான்சன் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலிய அணி தேர்வை விமர்சித்துள்ளனர். அதே குற்றச்சாட்டை தற்போது அந்த அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸும் முன்வைத்துள்ளார். 

இதுகுறித்து சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில், அணி தேர்வு மோசமாக உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தற்போது மிகச்சிறந்த அணியாக இல்லை என்பது தெரிகிறது. ஆனால் என்னை பொறுத்தவரை அணி தேர்வாளர்கள்தான் பெரிய பிரச்னையாக இருப்பதாக கருதுகிறேன். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தேர்வின் மீதும் தேர்வாளர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. சீனியர் வீரர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது அதற்குள்ளாக லாபஸ்சாக்னே மற்றும் ரிச்சர்ட்ஸனை எப்படி அணியில் எடுத்தார்கள்? என்று கடுமையாக சாடியுள்ளார் டீன் ஜோன்ஸ். 

அத்துடன் நில்லாமல், தற்போதைய தேர்வாளர்களை நீக்கிவிட்டு 3 புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களை நியமிக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் புதிய சி.இ.ஓ கெவின் ராபர்ட்டுக்கு வலியுறுத்தியுள்ளார். 
 

click me!