
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி புதன்கிழமை இந்தியாவிற்கு வந்தது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்த கையோடு வங்கதேசத்திலிருந்து பிற்பகல் 3 மணியளவில் மும்பை வந்த இங்கிலாந்து அணியினர், பின்னர் அங்கிருந்து தெற்கு மும்பையில் உள்ள ஓட்டலுக்குச் சென்றனர்.
இந்தியாவும், இங்கிலாந்தும் 5-ஆவது முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.
இங்கிலாந்து வீரர்கள் வரும் 5-ஆம் தேதியிலிருந்து பயிற்சியைத் தொடங்கவுள்ளனர். முதல் டெஸ்ட் வரும் 9-ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 2-ஆவது டெஸ்ட் வரும் 17 முதல் 21 வரை விசாகப்பட்டினத்திலும், 3-ஆவது டெஸ்ட் வரும் 26 முதல் 30 வரை மொஹாலியிலும், 4-ஆவது டெஸ்ட் டிசம்பர் 8 முதல் 12 வரை மும்பையிலும், 5-ஆவது டெஸ்ட் டிசம்பர் 16 முதல் 20 வரை சென்னையிலும் நடைபெறவுள்ளன.
அணி விவரம்: அலாஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜாபர் அன்சாரி, ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஜேக் பால், கேரி பேலன்ஸ், கேரத் பட்டி, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், பென் டக்கெட், ஸ்டீவ் ஃபின், ஹமீது, ஆதில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.