
எலைட் டிராபி டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனையை சாய்த்து ஜெர்மனியின் ஜூலியா ஜியார்ஜஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
எலைட் டிராபி டென்னிஸ் போட்டியில் சீனாவில் நடைபெற்றது. இதன் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த ஜெர்மனியின் ஜூலியா மற்றும் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் கோகோ வான்டெவெக் மோதினர். இதில், கோகோ வான்டெக்கை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஜீலியா.
இந்தாண்டில் ஜூலியா கைப்பற்றும் 2-வது பட்டம் இதுவாகும்.
இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள நிலையிலேயே இந்த சீசனை நிறைவு செய்துள்ளார் ஜூலியா. இது, தரவரிசை வரலாற்றில் அவரது அதிகபட்சமாகும்.
இதையடுத்து, எலைட் டிராபி பட்டத்தை கைப்பற்றிய வீராங்கனைகள் வரிசையில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோருடன் ஜூலியாவும் இணைந்துள்ளார்.
ஜூலியா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கிரெம்லின் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.