டிஎன்பிஎல் அப்டேட்: திருவள்ளூர் வீரன்ஸிடம் சுருண்டது திண்டுக்கல் டிராகன்ஸ்

First Published Jul 29, 2017, 12:28 PM IST
Highlights
dindigul defeated by tiruvallur


தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 7-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருவள்ளூர் வீரன்ஸ் அணி.

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி, திருவள்ளூர் அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 17.5 ஓவர்களில் 83 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

திருவள்ளூர் வீரன்ஸ் தரப்பில் ராஹில் ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் ஆடிய திருவள்ளூர் அணியால் 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 84 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அந்த அணியில் சித்தார்த் 37 ஓட்டங்களும், அபராஜித் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் டி.நடராஜன், சஞ்சய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

tags
click me!