தலைவன்னா அது தோனி தான்.. புகழ்ந்து தள்ளும் முன்னாள் பயிற்சியாளர்

First Published Mar 1, 2018, 1:53 PM IST
Highlights
dhoni is a good captain said gary kirsten


கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்து வருகிறது. அண்மையில் நடந்துமுடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்று அசத்தியது.

கோலி தலைமையிலான இந்திய அணியை முன்னாள் ஜாம்பவான்கள் பலர் புகழ்ந்துவருகின்றனர். அதேநேரத்தில் கோலியின் கேப்டன்சி மற்றும் அணுகுமுறை மீதான விமர்சனங்களும் தோனியுடனான ஒப்பீடும் செய்யப்படுகின்றன.

நெருக்கடியான நிலைகளிலும் தோனி, கூலாகவே அதையெல்லாம் அணுகுவார். ஆனால் கோலி களத்தில் ஆக்ரோஷமாகவே இருக்கிறார். ஆக்ரோஷமாக இருப்பது தவறில்லை என்றாலும் ஓவர் ஆக்ரோஷமாக இருக்கிறார் கோலி. கோலி தனது அணுகுமுறையை மாற்றி ஆக்ரோஷத்தை குறைக்க வேண்டும் என காலிஸ், ஸ்டீவ் வாக் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் அறிவுரை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், தோனியின் கேப்டன்சி குறித்தும் இந்திய அணிக்கு பயிற்சியளித்த அனுபவம் குறித்தும் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், ஒரு அணி நெருக்கடியில் இருக்கும்போது தலைவன் எத்தகைய பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு தோனிதான் சிறந்த உதாரணம் என புகழ்ந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கேரி கிறிஸ்டன் 2008லிருந்து 2011 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவர் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில் தான்(2011) இந்திய அணி உலக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோலியின் ஆக்ரோஷ அணுகுமுறை தொடர்பான விவாதங்கள் நடந்துவரும் நிலையில், தோனியின் கேப்டன்சியையும் அவரது அணுகுமுறையையும் கேரி கிறிஸ்டன் புகழ்ந்துள்ளது, கோலியின் அணுகுமுறையை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்திய அணிக்கு கிடைத்த மிகப் பெரிய விஷயம் என்று என்னைப் பற்றி தோனி பெருமையுடன் கூறினார் என்று கேரி கிறிஸ்டன் தெரிவித்தார்.
 

click me!