BMW காரை திருப்பித் தர முடிவு செய்த ஒலிம்பிக் வீராங்கனை…

Asianet News Tamil  
Published : Oct 12, 2016, 04:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
BMW காரை திருப்பித் தர முடிவு செய்த ஒலிம்பிக் வீராங்கனை…

சுருக்கம்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் அசத்திய தீபா கர்மாக்கர், தான் பரிசாக பெற்ற பிஎம்டபிள்யூ காரை திருப்பித்தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கமும், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

அதேபோல் ஜிம்னாஸ்டிக் பிரிவில் அசத்திய தீபா கர்மாக்கர் 4-வது இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். இருப்பினும் அவரின் விடா முயற்சியை இரசிகர்கள் பாராட்டினர்.

இந்த நிலையில் ஹைதராபாத் பேட்மின்டன் அசோசியேஷன் தலைவர் சாமுண்டேஷ்வரநாத், இவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார்.

இந்த கார்களை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கையால் அவர்களுக்கு வழங்கினார்

இந்த நிலையில் தான் பரிசாக பெற்ற பிஎம்டபிள்யூ காரை தீபா கர்மாக்கர் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சொந்த ஊரான அகர்த்தலா போன்ற சிறிய நகரில் இந்த காரை ஓட்டுவதும், அதை முறையாக பராமரிப்பதும் கடினமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?
வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்