உலக கோப்பையை இந்த அணிதான் வெல்லும்!! அடித்து சொல்லும் டிவில்லியர்ஸ்

By karthikeyan VFirst Published Nov 18, 2018, 3:40 PM IST
Highlights

அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை எந்த அணி வெல்ல வாய்ப்புள்ளது என்று டிவில்லியர்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை எந்த அணி வெல்ல வாய்ப்புள்ளது என்று டிவில்லியர்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை தொடங்குகிறது. உலக கோப்பை இன்னும் ஆறரை மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இதுவரை உலக கோப்பையை வென்றிராத இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. அதேநேரத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவாக உள்ளன. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சிறப்பாக உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு அணியும் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையை இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளில் ஒரு அணி வெல்ல வாய்ப்புள்ளது என டிவில்லியர்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி வலுவாக உள்ள தென்னாப்பிரிக்க அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. அதேபோல இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் வலுவாக உள்ளதால் அந்த அணிகளில் ஒன்றும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக டிவில்லியர்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார். 
 

click me!