டேவிட்  வார்னருக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு - கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு...

Asianet News Tamil  
Published : May 03, 2018, 11:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
டேவிட்  வார்னருக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு - கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு...

சுருக்கம்

David Warner gets chance to play again - Cricket Australia announces ...

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணியின்  டேவிட்  வார்னர் மீண்டும் விளையாட வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை செயல் அலுவலர் ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் 3-வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்மித், வார்னர், பாங்கிராப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஓராண்டு தடை விதித்தது.

இந்த நிலையில் நேற்று ஜேம்ஸ் சதர்லேண்ட் செய்தியாளர்களிடம் கூறியது: "வார்னர் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும். விளையாட முடியாத காலத்தில் தங்கள் தகுதி திறனை மேம்படுத்தி, ஆஸ்திரேலிய அணி தேர்வாளர்களிடம் நிருபீத்துக் காட்ட வேண்டும். அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். 

அந்த வீரர்களின் நன்மதிப்பு சரிந்துவிட்டது. அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பது தேவையான ஒன்று. தடையின் ஒரு பகுதியாக விளையாடவும் வேண்டும். அனைவரும் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் பங்கேற்று விளையாடுவதை காண விரும்புகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!