உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும்!! அடிச்சு சொல்றது யாருனு தெரியுமா..?

By karthikeyan VFirst Published Dec 1, 2018, 4:15 PM IST
Highlights

இதுவரை உலக கோப்பையை வென்றிராத இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. அதேநேரத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவாக உள்ளன. 
 

அடுத்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை தொடங்குகிறது. உலக கோப்பை இன்னும் ஆறரை மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இதுவரை உலக கோப்பையை வென்றிராத இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. அதேநேரத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவாக உள்ளன. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சிறப்பாக உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு அணியும் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. 

விராட் கோலி தனது கேப்டன்சியில் உலக கோப்பையை வெல்லவேண்டும் என்ற வேகத்தில் உள்ளார். அவரும் நல்ல ஃபார்மில் உள்ளார், இந்திய அணியும் வலுவாக உள்ளது. கபில் தேவ் தலைமையில் 1983ம் ஆண்டும் தோனி தலைமையில் 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை இரண்டு முறை வென்றது. மூன்றாவது கோப்பையை இந்திய அணிக்கு வென்றுகொடுக்கும் முனைப்பில் கோலி உள்ளார். 

ஆனால் விராட் கோலியின் கேப்டன்சியின் மீது பல விமர்சனங்கள் உள்ளன. களவியூகம், வீரர்களை பயன்படுத்தும் விதம், வீரர்களுடனான அணுகுமுறை ஆகியவற்றில் கோலி கைதேர்ந்தவராக இல்லை. கோலி மேம்பட்ட மற்றும் முதிர்ந்த கேப்டனாக இல்லை என்பதே பல முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் முன்னாள் கேப்டன்களின் கருத்தாக இருக்கிறது. 

கோலி மிகச்சிறந்த வீரராக திகழ்ந்தாலும் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்தாலும் அவரது கேப்டன்சி சிறப்பாக இல்லை. இந்நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வெல்லுமா என்ற கேள்விக்கு பதிலளித்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி, 2019 உலக கோப்பையை வெல்லும் அனைத்து தகுதிகளும் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது என்று டேரன் சமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

click me!