பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவியை சரமாரியாக தாக்கிய போலீஸ்…. எதற்கு தெரியுமா?

Asianet News Tamil  
Published : May 22, 2018, 06:35 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவியை சரமாரியாக தாக்கிய போலீஸ்…. எதற்கு தெரியுமா?

சுருக்கம்

cricketer ravindra jadeja wife beaten by a police in Gujarath

குஜராத்தில் கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை போலீஸ் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டியில் விளையாட தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை அணி மும்பையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. 

இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜாவின்  மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் முன்னாள்  சென்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அகிர் என்பவர் பைக் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து ஜடேஜா மனைவி காரை விட்டு இறங்கினார்.

அப்போது ஆத்திரமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய், ஜடேஜா மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். பொதுமக்கள் அவரை தடுக்கும் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஜடேஜாவின் மனைவி காயமடைந்தார்.

இதுகுறித்து தகவல்  அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஜடேஜா மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸ் கான்ஸ்டபிள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு பெண் என்றும் பாராமல் பொது இடத்தில் தாக்கிய போலீஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து