காமன்வெல்த் பளு தூக்குதல்: மூன்று தங்கங்கள் உள்பட் பத்து பதக்கங்கள் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்…

First Published Sep 7, 2017, 9:23 AM IST
Highlights
Commonwealth Weightlifting Three gold medals won by Indian medalists


காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா மூன்று தங்கங்கள் உள்பட, பத்து பதக்கங்கலை வென்றுள்ளன.

காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில், ஆடவர் இளையோருக்கான 62 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முத்துப்பாண்டி ராஜா ஸ்னாட்ச் பிரிவில் 110 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 150 கிலோ என மொத்தமாக 260 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.

அத்துடன், ஆடவர் ஜூனியருக்கான 62 கிலோ எடைப் பிரிவிலும் முத்துப் பாண்டி ராஜா 260 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சீனியர் மகளிருக்கான 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சரஸ்வதி ரெளத், 179 கிலோ (82+97) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஜூனியர் மகளிருக்கான 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் எர்ரா தீக்ஷிதா 167 கிலோ (73+94) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.

ஆடவர் இளையோருக்கான 69 கிலோ எடைப் பிரிவிலும், ஜூனியர் ஆடவருக்கான 69 கிலோ எடைப் பிரிவிலும் இந்திய வீரர் தீபக் லேதர் தங்கம் வென்றார்.

அதேபோன்று சீனியர் ஆடவருக்கான 69 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 295 (138+157) கிலோ எடையைத் தூக்கி இந்திய வீரர் தீபக் லேதர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தியாவின் வந்தனா குப்தா சீனியர் மகளிருக்கான 63 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார்.

உமேஷ்வரி, இளையோர் மகளிர் மற்றும் ஜூனியர் மகளிருக்கான 63 கிலோ எடைப் பிரிவில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இப்படி இந்திய வீரர்கள் மூன்று தங்கங்கள் உள்பட பத்து பதக்கங்களை இந்தியாவுக்காக வென்றுள்ளனர்.

tags
click me!