
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிரிகோர் டிமிட்ரோவும், மகளிர் ஒற்றையர் பிரிவில் கார்பைன் முகுருஸாவும் வாகைச் சூடி அசத்தினர்.
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் மற்றும் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் மோதினர்.
இதில், 6-3, 7-5 என்ற நேர் செட்களில் நிக் கிர்ஜியோஸை வீழ்த்தினார் டிமிட்ரோவ்.
இதன்மூலம் மாஸ்டர்ஸ் போட்டியில் முதல் சாம்பியன் பட்டம் வென்றார் டிமிட்ரோவ்.
வெற்றி குறித்து டிமிட்ரோவ் பேசியது:
“எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி இது. அடுத்த இரண்டு நாள்கள் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துவிட்டு, அதன்பிறகு அமெரிக்க ஓபன் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடவுள்ளேன்' என்றார்.
அதேபோன்று மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்புடன் மோதினார்.
இதில், 6-1, 6-0 என்ற நேர் செட்களில் ஹேலப்பை தோற்கடித்தார் முருகுஸா.
இந்த ஆண்டில் முகுருஸா வென்ற 2-ஆவது பட்டம் இது. ஒட்டுமொத்தமாக அவர் வென்ற 5-ஆவது பட்டமாகும்.
வெற்றி குறித்து முகுருஸா பேசியது:
“'சைமோனாவின் இடத்துக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் இந்தப் போட்டியை வெல்ல விரும்பினேன். நினைத்தது போலவே வென்றுவிட்டேன்' என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.