சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி - ஜோர்டான் தாம்சன் மோதல்...

Asianet News Tamil  
Published : Feb 17, 2018, 11:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி - ஜோர்டான் தாம்சன் மோதல்...

சுருக்கம்

Chennai Open Challenger Tennis Yuki Bhambri in Final Match - Jordan Thomson Clash ...

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் மோதுகின்றனர்.

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் யூகி பாம்ப்ரியும், 3-வது இடத்தில் இருந்த தென் கொரியாவின் டக்ஹீ லீயும் மோதினர்.

விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் யூகி 7-5, 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.

இந்த ஆட்டத்தில் யூகி ஒரு பிரேக் பாய்ண்ட்டை கூட சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் லீயை 2 முறை சந்தித்துள்ள யூகி, அவருக்கு எதிராக தனது 2-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

அத்துடன், உலகத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள்ளாக மீண்டும் முன்னேறும் வாய்ப்பையும் அவர் உறுதி செய்துள்ளார்.

மற்றொரு அரையிறுதியில் தாம்சன் 6-1, 7-6 என்ற செட்களில் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினௌஸை வீழ்த்தினார். இதையடுத்து இறுதி ஆட்டத்தில் யூகி - தாம்சன் மோதுகின்றனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி - விஷ்ணு வர்தன் இனை 7-6, 5-7, 10-5 என்ற செட்களில் துருக்கியின் செம் இல்கெல் - செர்பியாவின் டனிலோ பெட்ரோவிச் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஐபிஎல் 2026 ஒளிபரப்புக்கு வங்கதேசம் அதிரடி தடை.. 'எங்கள் வீரரைத் தொட்டால்'.. இந்தியாவுக்கு பதிலடி!
இந்தியா vs ஆஸ்திரேலியா: டி20 உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் பேட்டிங் லைன்