டெல்லிக்கு மரண அடி கொடுத்து கொல்கத்தா அசத்தல் வெற்றி... 

Asianet News Tamil  
Published : Apr 17, 2018, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
டெல்லிக்கு மரண அடி கொடுத்து கொல்கத்தா அசத்தல் வெற்றி... 

சுருக்கம்

Calcutta defeat Delhi in ipl

டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி பெற்றது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர் டெவில்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியின் 13-வது ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. 

டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததையடுத்து கொல்கத்தா அணியின்  கிறிஸ் லீன், சுனில் நரேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

சுனில் நரேன் 1 ஓட்டம் எடுத்த நிலையில்ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ராபின் உத்தப்பா - கிறிஸ் லீனுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். உத்தப்பா 35 ஓட்டங்களிலும், லீன் 31 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

அதனைத் தொடர்ந்து களம் கண்ட கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஆன்ட்ரே ரஸ்ஸல் - ராணா இணை சிறப்பாக ஆடியது. 

ரஸ்ஸல் 41 ஓட்டங்களிலும், ராணா 59 ஓட்டங்களிலும், ஷுப்மன் கில் 6 ஓட்டங்களிலும், டாம் கர்ரன் 2 ஓட்டங்களிலும், பியுஷ் சாவ்லா ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

டெல்லி அணியின் ராகுல் தேவதியா 3 விக்கெட்டுகளையும், பெளல்ட், மோரீஸ் தலா 2 விக்கெட்டுகளையும், நதீம், சமி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் டெல்லி அணி சார்பில் கம்பீர், ஜேசன் ராய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராய் 1 ஓட்டத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து துவக்கத்திலேயே அதிர்ச்சி தந்தனர். 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் 15 ஓட்டங்களையே எடுத்திருந்தது. 

ஷ்ரேயஸ் ஐயர் 4 ஓட்டங்கள், ராகுல் தேவைதியா 1 ஓட்டம், விஜய் சங்கர் 2 ஓட்டங்கள், மோரீஸ் 2 ஓட்டங்கள், முகமது சமி 7 ஓட்டங்கள், பெளல்ட் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ரிஷப் பந்த் 43 ஓட்டங்களுடனும், கிளென் மேக்ஸ்வெல் 47 ஓட்டங்களைக் குவித்தனர்.

கொல்கத்தா அணியின் சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாவ்லா, ரஸ்ஸல், சிவம் மவி , டாம் கர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

டெல்லி அணி 14.2 ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களையே எடுத்தது. இறுதியில் 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி பெற்றது. 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிஎஸ்கே அணியை வாங்கும் உதயநிதி..! இத்தனை ஆயிரம் கோடியா..? ஐபிஎல் கிரிக்கெட்டில் பரபர ட்விஸ்ட்..!
ஜோராக தொடங்கும் டி20 உலகக்கோப்பை... அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா - பிளேயிங் லெவன் இதோ