நீயெல்லாம் ஒரு ஆளுனு என் பவுலிங்கை பத்தி பேசுற..? பாகிஸ்தான் வீரரை தெறிக்கவிட்ட பும்ரா

By karthikeyan VFirst Published Oct 19, 2018, 11:30 AM IST
Highlights

நான் பந்துவீசும் முறை குறித்து யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை என தனது பவுலிங் ஸ்டைலை விமர்சித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருக்கு பும்ரா பதிலடி கொடுத்துள்ளார். 
 

நான் பந்துவீசும் முறை குறித்து யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை என தனது பவுலிங் ஸ்டைலை விமர்சித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருக்கு பும்ரா பதிலடி கொடுத்துள்ளார். 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முன்னெப்போதையும் விட மிகச்சிறந்த வேகப்பந்து யூனிட்டாக திகழ்கிறது. புவனேஷ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ், ஷமி, இஷாந்த் சர்மா, கலீல் அகமது என எல்லாவிதமான பவுலர்களையும் கொண்ட நல்ல கலவையாக உள்ளது. 

இவர்களில் குறிப்பாக பும்ரா உலகத்தரம் வாய்ந்த பவுலராக திகழ்கிறார். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவரது பவுலிங் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். இந்நிலையில், அவரது பவுலிங் ஸ்டைலை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்யூம் ஜாவித் விமர்சித்திருந்தார். 

பும்ரா அவரது ஸ்டைலிலேயே தொடர்ந்து பந்துவீசினார்ல் அடிக்கடி காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என ஜாவித் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், மும்பையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பும்ராவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து எகெள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த பும்ரா, பந்துவீச்சு வல்லுநர்களோ முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களோ என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. அதில் கவனம் செலுத்துவதும் இல்லை. எனக்கு எது வசதியாக இருக்கிறதோ அப்படித்தான் நான் பந்துவீசுவேன். கிரிக்கெட்டில் சிறந்த ஸ்டைல் என்று எதுவுமே இல்லை. காயம் ஏற்படாத ஒரு வீரரை காட்ட முடியுமா? காயம் ஏற்படாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் சிறப்பாக பந்துவீசுவதிலும் மட்டுமே கவனம் செலுத்திவருகிறேன். விமர்சனங்களில் கவனம் செலுத்துவதில்லை என்று பும்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!