உலகின் தலைசிறந்த பவுலர் இவர் தான்!! ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் அதிரடி

Published : Oct 09, 2018, 02:19 PM IST
உலகின் தலைசிறந்த பவுலர் இவர் தான்!! ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் அதிரடி

சுருக்கம்

உலகின் தலைசிறந்த பவுலர் ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர் ரஷீத் கான் தான் என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பென் கட்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.   

உலகின் தலைசிறந்த பவுலர் ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர் ரஷீத் கான் தான் என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பென் கட்டிங் புகழாரம் சூட்டியுள்ளார். 

ரஷீத் கான் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக வலம்வருகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அசத்தலாக செயல்பட்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி கொண்டிருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் ரஷீத் கான் சிறப்பாக ஆடி அந்த அணி வெற்றிகளை பெற காரணமாக திகழ்ந்தார். 

எதிரணி இலக்கை விரட்டும்போது, கடைசி ஓவரில் ஒரு ஸ்பின்னரை நம்பிக்கையுடன் பந்துவீசவைக்கலாம் என்றால், அது ரஷீத் கான் தான். ஆஃப்கானிஸ்தான் அணி இக்கட்டான சூழல்களிலும் சரி, கடைசி ஓவர்களிலும் சரி ரஷீத் கானைத்தான் பந்துவீசவைக்கிறது. 

ரஷீத் கான் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஐபிஎல்லில் அவரது அபாரமான பந்துவீச்சை கண்டு பாராட்டாத ஜாம்பவான்களே கிடையாது. டி20 ஸ்பெஷலிஸ்ட்டாக திகழும் ரஷீத் கான் 191 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

சர்வதேச போட்டிகளில் 184 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐசிசி தரவரிசை பட்டியலில், ஒருநாள் போட்டிகளை பொறுத்தமட்டில் நம்பர் 1 ஆல்ரவுண்டராகவும் பவுலிங்கில் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார் ரஷீத் கான். டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் நம்பர் 1 பவுலராக ரஷீத் கான் உள்ளார். 

இந்நிலையில் தற்போது ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கில் ஆடிவரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பென் கட்டிங், தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த பவுலர் ரஷீத் கான் தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ரஷீத் கானை தவிர மேலும் பல சிறந்த ஸ்பின்னர்களை ஆஃப்கானிஸ்தான் அணி பெற்றிருப்பதாக பென் கட்டிங் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

U19 உலகக்கோப்பையில் சதம் விளாசிய விஹான் மல்ஹோத்ரா.. திணறும் ஜிம்பாபே
U19 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேயை 204 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி