வீரர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டுமாம் - பிசிசிஐ-க்கு கோலி கோரிக்கை...

Asianet News Tamil  
Published : Nov 29, 2017, 10:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
வீரர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டுமாம் - பிசிசிஐ-க்கு கோலி கோரிக்கை...

சுருக்கம்

BCCI wants to raise salaries for players

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவிடம் , கேப்டன் விராட் கோலி வலியுறுத்த இருக்கிறார்.

அடுத்தாண்டு 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்காக ஸ்டார் நெட்வொர்க் உடன் பிசிசிஐ ஓர் ஒப்பந்தம் இயற்றியுள்ளது. அதன்மூலம், பிசிசிஐ அதிக வருவாய் ஈட்டுமாம்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் இந்திய அணி கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.

என்வே, பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராயை வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து, வீரர்களின் ஊதிய உயர்வு குறித்து வலியுறுத்த இருக்கிறாராம் வீராட் கோலி.

முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் வினோத் ராயைச் சந்தித்து வீரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோலி கோரிக்கை முன்வைக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்