
ஐபிஎல் தொடர், கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்துடன் ஆதரவு அளித்துவருகின்றனர்.
ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. இதற்கான ஏலம் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது.
ஐபிஎல் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. இதுவரை நடந்துள்ள 10 தொடர்களில், மும்பை இந்தியன்ஸ் 3 முறையும், சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா இரண்டு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.
பெங்களூரு, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை. இதுவரை வெல்லாத இந்த மூன்று அணிகளும் இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளனர்.
இந்நிலையில், ஐபிஎல் தொடர்பாக பேசியுள்ள சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை சென்னை அணி களமிறங்குகிறது. இந்த முறை சென்னை அணி அல்லது கொல்கத்தா அணி தான் கோப்பையை வெல்லும் என நினைக்கிறேன். சிறந்த வீரர்களை கொண்டுள்ள இந்த இரண்டு அணிகளில் ஒன்றுதான் இந்த முறை கோப்பையை வெல்லும் என பத்ரிநாத் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.