ஆஸ்திரேலியாவை அலறவிட்ட அசாருதீன்!! அதகளப்படுத்துமா இந்தியா..?

By karthikeyan VFirst Published Nov 7, 2018, 1:59 PM IST
Highlights

இந்திய மண்ணில் அசத்தலாக ஆடும் இந்திய அணி, வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. அதனால் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்று, தாங்கள் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் சிறப்பாக ஆடும் அணி தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
 

இந்திய மண்ணில் அசத்தலாக ஆடும் இந்திய அணி, வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. அதனால் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்று, தாங்கள் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் சிறப்பாக ஆடும் அணி தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, சொந்த மண்ணில் சீன் போடும் அணி அல்ல என்பதை ஆஸ்திரேலியாவில் நிரூபித்தாக வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

ஆஸ்திரேலிய அணி ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி என பெரும் வேகப்பந்து வீச்சு படையே உள்ளது. அதேபோல் வேகப்பந்து வீச்சையும் பவுன்சரையும் அசால்ட்டாக அடித்து நொறுக்கும் ரோஹித் உள்ளார். கோலி, ரஹானே, புஜாரா, ராகுல் இவர்களோடு இளம் திறமை பிரித்வி ஷா என பேட்டிங்கிலும் இந்திய அணி வலுவாகவே உள்ளது.



நம் அணி வலுவாக இருக்கும் அதே நிலையில், ஆஸ்திரேலிய அணி நலிவடைந்துள்ளது. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய நட்சத்திர வீரர்களை இழந்து தவிக்கிறது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணியில் அவர்கள் இருவரும் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பலம். அதனால் இந்திய அணிதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், தற்போது முன்னாள் கேப்டன் அசாருதீனும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அசாருதீன், தற்போதைய இந்திய அணி வலுவாக உள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் தற்போதைய இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என்று உறுதிபட நம்பிக்கை தெரிவித்துள்ளார் அசாருதீன்.

click me!