ரோஹித்தை கடுப்பேற்றி சுற்றி நின்று நக்கலா சிரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்!! ஹிட்மேனின் ரியாக்‌ஷனை வீடியோவில் பாருங்க

By karthikeyan VFirst Published Dec 27, 2018, 2:54 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் சீண்ட, சுற்றியிருந்த அந்த அணியின் வீரர்கள் நக்கலாக சிரித்தனர். எனினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ரோஹித் சர்மா, ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்.
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் சீண்ட, சுற்றியிருந்த அந்த அணியின் வீரர்கள் நக்கலாக சிரித்தனர். எனினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ரோஹித் சர்மா, ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் புஜாரா சதமடிக்க, மயன்க், கோலி, ரோஹித் ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஹனுமா விஹாரியை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே நல்ல பங்களிப்பை அளித்ததால் 443 ரன்களை குவித்தது இந்திய அணி. 7வது விக்கெட்டாக ஜடேஜாவை இழந்ததும் இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 6 ஓவர்கள் பேட்டிங் செய்து விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில், ரோஹித் சர்மா வழக்கத்திற்கு மாறாக மிகவும் நிதானமாக பொறுமையை கையாண்டு பேட்டிங் செய்தார். வழக்கமாக தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து எளிதாக விக்கெட்டை இழந்துவிடும் ரோஹித் சர்மா, இன்று தூக்கியே அடிக்கவில்லை. அப்படி தூக்கி அடித்தாலும் சீரான உயரத்தில் தூக்கி பவுண்டரி தான் அடித்தாரே தவிர சிக்ஸருக்கு முயற்சிக்கவில்லை. தனது தவறை உணர்ந்து அதை திருத்திக்கொண்டு ஆடினார் ரோஹித். 

ஆஸ்திரேலிய அணியும் வழக்கம்போல ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திவிடலாம் என்ற ஆசையில் நாதன் லயனை தொடர்ந்து பந்து வீச வைத்தது. ஆனால் சற்றும் அசராத ரோஹித் சர்மா, பொறுமையை கைவிடாமல் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். அதனால் ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்த முடியாத விரக்தியில் ஸ்லெட்ஜிங் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன். 

விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்த டிம் பெய்ன், ரோஹித்திடம், நீங்கள் மட்டும் இந்த மைதானத்தில் சிக்ஸர் அடித்துவிட்டால் பின்னர் நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகராகி விடுவேன் என்று ரோஹித்தை சீண்டும் விதத்தில் கூற, சுற்றி நின்ற உஸ்மான் கவாஜா, ஃபின்ச் ஆகியோர் நக்கலாக சிரித்தனர். ஆனால் தன்னை அவர்கள் உசுப்பேற்றுவதை உணர்ந்த ரோஹித் சர்மா, அவசரப்படாமல் மீண்டும் பொறுமையை கடைபிடித்து ஆடினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் குவித்து களத்தில் நின்றார் ரோஹித் சர்மா. 

"If Rohit hits a six here I'm changing to Mumbai" 😂 pic.twitter.com/JFdHsAl84b

— cricket.com.au (@cricketcomau)

ரோஹித் சர்மாவின் கவனத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் உசுப்பேற்றி சிதைத்துவிட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் ரோஹித் கேப்டனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு டுவீட்டை போட்டுள்ளது. அது ரசிக்கும் வகையில் உள்ளது. 

pic.twitter.com/5GVqs7HJz9

— Mumbai Indians (@mipaltan)
click me!