இந்தியாகிட்ட மோதப்போறத நெனச்சு இப்பவே அரண்டுபோன ஆஸ்திரேலிய கேப்டன்!! பேச்சுலயே பீதி தெரியுதே

By karthikeyan VFirst Published Nov 13, 2018, 3:52 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக பேட்டிங் வரிசையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக பேட்டிங் வரிசையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே ஸ்மித்தும் வார்னரும் இல்லாமல் தவித்துவருகிறது. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இரு நட்சத்திர வீரர்களும் இல்லாததால் தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. சொந்த மண்ணிலேயே மண்ணை கவ்விவருகிறது ஆஸ்திரேலிய அணி. உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அந்த அணியில் நிலை பரிதாபகரமாக உள்ளது. 

அனைத்து அணிகளும் உலக கோப்பைக்கு தீவிரமாக தயாராகிவரும் நிலையில், தொடர் தோல்விகளிலிருந்து மீளும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலியா. தென்னாப்பிரிக்காவிடம் 2-1 என ஒருநாள் தொடரை இழந்தது. 

ஆஸ்திரேலிய அணி சரியான பேட்டிங் வரிசையை கண்டறிவதற்காக சோதனை முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. கிறிஸ் லின்னை வெவ்வேறு வரிசைகளில் களமிறக்கி சோதித்தது. உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், பேட்டிங் வரிசையை உறுதி செய்து வலுவான அணியாக உருவெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

இதற்கிடையே இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆட உள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாகவே பேட்டிங் வரிசையை உறுதிப்படுத்தும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. ஆஸ்திரேலிய அணி பலவீனமாக இருக்கும் அதேவேளையில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே மிரட்டலான ஃபார்மில் இருக்கிறது இந்திய அணி. எனவே இந்திய அணியை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி தீவிரமாக தயாராக வேண்டியிருக்கிறது. 

இந்நிலையில், இந்தியா தொடர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், அணி தோல்வியடையும் போது அழுத்தத்திற்கு உள்ளாவது இயல்புதான். இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக எங்கள் பேட்டிங் வரிசையை உறுதிப்படுத்த வேண்டும். நான், மேக்ஸ்வெல், லின், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரின் பேட்டிங் வரிசையை உறுதிப்படுத்த வேண்டும் என ஃபின்ச் தெரிவித்துள்ளார். 

புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, உமேஷ், கலீல் அகமது என வலுவான வேகப்பந்து யூனிட்டை கொண்டுள்ள இந்திய அணியை எப்படி சமாளிக்கப்போகிறது ஆஸ்திரேலியா..? பொறுத்திருந்து பார்ப்போம். 
 

click me!