மழையால் நடுங்கும் ஆஸ்திரேலியா; கடைசி லீக் ஆட்டத்திலாவது ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?

Asianet News Tamil  
Published : Jun 06, 2017, 12:09 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
மழையால் நடுங்கும் ஆஸ்திரேலியா; கடைசி லீக் ஆட்டத்திலாவது ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?

சுருக்கம்

Australia Will be lucky at the last league

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் மழை பெய்து அந்த அணிக்குக் கடுமையான நெருக்கடி உண்டாக்கியுள்ளது. கடைசி லீக் ஆட்டத்திலாவது ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையேயான ஆட்டம் இலண்டனில் நேற்று நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அந்த அணியில் தொடக்க வீரர் தமிம் இக்பால் 95 ஓட்டங்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இதனால் அந்த அணி 44.3 ஓவர்களில் 182 ஓட்டங்களுக்கு சொருகியது.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை பெய்தது.

இதில், வார்னர் 40 ஓட்டங்கள், ஸ்மித் 22 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். 

தொடர் மழையால் கட்டாயத் தேவையான 20 ஓவர்களுக்கு ஆட்டம் நடைபெறாததாலும் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி ஆட்டம் கைவிடப்பட்டது. கடைசியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தன.

ஏற்கெனவே, நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியும் மழையால் தடைப்பட்டதால் இரு போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி கைவசம் இரு புள்ளிகள் மட்டுமே வைத்துள்ளது. 

கடைசி லீக் போட்டியில் பலம் பொருந்திய இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா மோதுகிறது. அந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும் ஆஸ்திரேலியா.

தோற்றுப் போனால் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை.

வங்கதேசம் - நியூஸிலாந்து இடையேயான போட்டியில் வெற்றிப் பெறுகிற அணி இங்கிலாந்துடன் இணைந்து அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: RR தோல்வியால் மைதானத்தில் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!
MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!