என்னடா இது.. ஆஸ்திரேலியாவுக்கு வந்த சோதனை!! பாகிஸ்தானிடம் பம்மிய ஆஸி., அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறல்

By karthikeyan VFirst Published Oct 9, 2018, 4:07 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. 
 

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. 

ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடுகின்றன. 

இதில் முதல் டெஸ்ட் போட்டி துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் முகமது ஹஃபீஸ் மற்றும் இமாம் உல் ஹக் அபாரமாக ஆடி சிறந்த தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். இமாம் உல் ஹக் 76 ரன்களிலும், சதம் விளாசிய ஹஃபீஸ் 126 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு ஷாஃபிக் - சோஹைல் ஜோடி சிறப்பாக ஆடியது. ஷாஃபிக் 80 ரன்கலும் சோஹைல் சதமும் விளாசினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 482 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் ஆரோன் ஃபின்ச் நல்ல தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 142 ரன்களை சேர்த்தது. இருவருமே அரைசதம் அடித்தனர். பின்ச் 62 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபஸ்சாக்னே ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதற்கிடையே சிறப்பாக ஆடிவந்த கவாஜாவும் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். 

142 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி, 171 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. மிட்செல் மார்ஷ் மற்றும் கேப்டன் டிம் பெய்ன் ஆகிய இருவரும் களத்தில் நின்று ஆடிவருகின்றனர். 
 

click me!