இன்று ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து மோதல்; ஜெயிக்கப் போவது யார்?

 
Published : Jun 02, 2017, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
இன்று ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து மோதல்; ஜெயிக்கப் போவது யார்?

சுருக்கம்

Australia - New Zealand fight today

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டமான இன்று ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும் எதிர்கொள்கின்றன.

ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும் எதிர்கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது ஆட்டம் எட்பாஸ்டனில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பெளலிங் என அனைத்துத் துறைகளிலும் வலுவாக உள்ளது.

டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை தொடங்கவுள்ளனர்.

மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின்னும், வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேஸில்வுட், பட் கம்மின்ஸ், ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆகிய நால்வர் கூட்டணியும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலம்.

நியூஸிலாந்து அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கோரே ஆண்டர்சன், கேன் வில்லியம்சன் போன்றவர்களும், வேகப்பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், டிம் செளதி கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் மிட்செல் சேன்ட்னரையும் சிறப்பாக செய்ல்படுகிறது.

ஆஸ்திரேலியா அணியின் விவரம்:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), கிளன் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜான் ஹேஸ்டிங்ஸ்/மார்கஸ் ஸ்டானிஸ், மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேஸில்வுட்.

நியூஸிலாந்து அணியின் விவரம்:

மார்ட்டின் கப்டில், டாம் லதாம்/லுக் ரோஞ்சி (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், நீல் புரூம், கோரே ஆண்டர்சன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சேன்ட்னர், டிம் செளதி, காலின் டி கிராண்ட்ஹோம்/ஆடம் மில்னி/ மிட்செல் மெக்கிளெனகன், டிரென்ட் போல்ட்.

இந்த அணிகளும் மோதுவது இன்று பிற்பகல் 3 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி