ஏடிபி சேலஞ்சர்: இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு தகுப்பெற்ற இந்திய வீரர்கள்…

Asianet News Tamil  
Published : Jun 22, 2017, 09:22 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
ஏடிபி சேலஞ்சர்: இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு தகுப்பெற்ற இந்திய வீரர்கள்…

சுருக்கம்

ATP Challenger Indian players who qualified for quarter-finals in doubles

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-கனடாவின் ஆதில் ஷமாஸ்தீன், பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பிரிட்டனின் இல்க்ளே நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் - கனடாவின் ஆதில் ஷமாஸ்தீன் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 4-6, 6-4, 12-10 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மட் ரெய்ட் - ஜான் பேட்ரிக் ஜோடியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

பயஸ் - ஆதில் ஜோடி தங்களின் காலிறுதியில் பெலாரஸின் ஆன்ட்ரே வாஸிலெவ்ஸ்கி -சிலியின் ஹன்ஸ் காஸ்டில்லோ ஜோடியை எதிர்கொள்கிறது.

மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் பூரவ் ராஜா - திவிஜ் சரண் ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் டொமினிக் குடியரசின் எஸ்டரெல்லா - பர்படாஸின் டேரியன் கிங் ஜோடியைத் தோற்கடித்து வென்றது.

பூரவ் - திவிஜ் ஜோடி தங்களின் காலிறுதியில் தாய்லாந்தின் சஞ்சய் ரதிவதனா - சஞ்சத் ரதிவதனா ஜோடியுடன் மோதுகிறது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: கெயில் ரெக்கார்டுக்கு ஆப்பு? ஐபிஎல்-ஐ மிரட்டும் 15 வயது ‘சின்ன’ புயல் வைபவ்..!
Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!