
சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் வென்றுத்தந்து இந்தியாவை கௌரவப்படுத்தி உள்ளனர்.
துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், மொத்தம் 47 நாடுகள் பங்கேற்ற நிலையில் அப்போட்டியின் இரண்டாம் நாளான நேற்று 3 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என எட்டு பதக்கங்களுடன் இந்தியா 7-ஆவது இடத்தில் உள்ளது.
இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜர், ஈட்டி எறிதல் (எஃப்-46), வட்டு எறிதல் (எஃப்-46) ஆகியவற்றில் தலா ஒரு தங்கம் வென்றார். ஈட்டி எறிதலில் 60.33 மீ. எறிந்து முதலிடம் பிடித்த குர்ஜர், வட்டு எறிதலில் 44.56 மீ. தொலைவு எறிந்தார்.
ஈட்டி எறிதலின் மற்றொரு பிரிவில் (எஃப்-44), இந்தியாவின் நரேந்தர் ரன்பீர் 47.75 மீ. தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
ஆடவருக்கான 400 மீ. ஓட்டத்தில் (டி-42/44/46) ஆனந்தன் குணசேகரன் வெள்ளி வென்றார். பிரமோத் கே யாதவ் வெண்கலம் வென்றார்.
ஆடவருக்கான மற்றொரு பிரிவு 400 மீ. ஓட்டத்தில் (டி-11/12/13) ரோஹித் வெண்கலம் வென்றார்.
ஆடவருக்கான 800 மீ. ஓட்டத்தில் (டி-13/20) ராம்கரன் சிங் வெண்கலம் வென்றார்.
அதேபோன்று ஆடவருக்கான குண்டு எறிதலில் (எஃப்-40/41/42) சுர்ஜித் சிங் வெண்கலம் வென்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.