ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்-2019 போட்டியை இந்தியா நடத்த முடிவு... 

First Published Apr 25, 2018, 10:51 AM IST
Highlights
Asian Olympic championship -2019 india going to conduct


2019-ஆம் ஆண்டு ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. 

உஸ்பெகிஸ்தானின் அர்கெஞ்ச் நகரில் கடந்த 22-ஆம் தேதி ஆசிய பளுதூக்குதல் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில், "2019-ஆம் ஆண்டு ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்தும்" என்று முடிவு எடுக்கப்பட்டது. 

இத்தகைய வாய்ப்பை இந்தியா பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டி நடைபெறும் தேதியும், நடத்தப்படும் நகரமும் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளன செயலர் சஹாதேவ் யாதவ், "ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் நடைபெறவுள்ள இந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் மூலமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் வீரர், வீராங்கனைகள் உறுதி செய்ய இயலும்.

இந்தப் போட்டியில், ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுச் சாம்பியன்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார். 
 

tags
click me!