ரொம்ப நேரம் ஆட்டம் காட்டிய கவாஜா!! அடித்து விரட்டிய அஷ்வின்

By karthikeyan VFirst Published Dec 7, 2018, 9:36 AM IST
Highlights

களத்தில் நீண்ட நேரம் நிலைத்து ஆடிவந்த ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டை ஒருவழியாக அஷ்வின் வீழ்த்தினார். 
 

களத்தில் நீண்ட நேரம் நிலைத்து ஆடிவந்த ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டை ஒருவழியாக அஷ்வின் வீழ்த்தினார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாராவின் பொறுப்பான சதத்தால் 250 ரன்களை குவித்தது. 

இதையடுத்து இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஃபின்ச் மற்றும் அறிமுக வீரர் மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, மூன்றாவது பந்திலேயே ஃபின்ச்சை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். ஃபின்ச் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

பின்னர் மார்கஸ் ஹாரிஸுடன் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முடிந்தவரை விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆட முயன்றது. ஆனால் அஷ்வின் அந்த ஜோடியை பிரித்தார். மார்க்ஸ் ஹாரிஸை 26 ரன்களில் வெளியேற்றிய அஷ்வின், ஷான் மார்ஷை 2 ரன்னில் கிளீன் போல்டாக்கி அனுப்பினார். 

இதையடுத்து உஸ்மானுடன் ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி சேர்ந்தார். மிகவும் நிதானமாக ஆடிவந்த உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ்கோம்புடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றார். 124 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து நிதானமாக ஆடி களத்தில் நிலைத்துவிட்ட கவாஜாவை அஷ்வின் தனது சுழலில் வீழ்த்தினார். கவாஜாவின் விக்கெட் மிக முக்கியமான விக்கெட். களத்தில் நிலைத்துவிட்ட அவரை இன்னும் நீண்டநேரம் நிற்க விட்டிருந்தால் இந்திய அணிக்கு ஆபத்தாக முடிந்திருக்கும். 

நல்ல வேளையாக கவாஜாவின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்திவிட்டார். 100 ரன்களுக்கு உள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. டிராவிஸ் ஹெட் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர்.
 

click me!