
பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் 2-வது நாள் ஆட்டங்களில் ஆர்.சி.எஃப்., புணே இந்திய ராணுவ அணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றிப் பெற்றன.
பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 53-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோவையின் தொடங்கியது.
பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2-வது நாளான நேற்று முதல் ஆட்டத்தில் கபூர்தலா ஆர்.சி.எஃப். - சென்னை அரைஸ் ஸ்டீல் அணிகள் மோதின.
இதில், 96-88 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அரைஸ் ஸ்டீல் அணியை வீழ்த்தி ஆர்.சி.எஃப். அணி, வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில், புணே இந்திய ராணுவ அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில், ராணுவ அணி 84-66 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள மின்வாரிய அணியை வீழ்த்தியது.
மூன்றாவது போட்டியில், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து சென்னை சுங்கத் துறை அணி மோதியது.
இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 82-71 என்ற புள்ளிகள் கணக்கில் சுங்கத் துறை அணியை வீழ்த்தியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.