
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அந்த அணிக்கு 338 என்ற கடின இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். ஷிகர் தவான், 14 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும் கோலியும் சதமடித்து அசத்தினர். ரோஹித் தனது 15-வது சதத்தையும் கோலி, தனது 32வது சதத்தையும் பதிவு செய்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தனர்.
147 ரன்கள் எடுத்த நிலையில், லாங் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
113 ரன்களில் கோலி அவுட்டானார். ரோஹித் மற்றும் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி, 337 ரன்கள் குவித்தது.
50 ஓவர் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணிக்கு 338 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி சார்பில் சவுதி, மில்னே மற்றும் சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.