#SLvsIND இன்னும் ஒரேயொரு விக்கெட் தான்.. சாஹல் படைக்கப்போகும் தரமான சாதனை

Published : Jul 27, 2021, 07:15 PM ISTUpdated : Jul 27, 2021, 07:17 PM IST
#SLvsIND இன்னும் ஒரேயொரு விக்கெட் தான்.. சாஹல் படைக்கப்போகும் தரமான சாதனை

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் சாதனையை படைக்க காத்திருக்கிறார்.  

இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் தொடர் முடிந்த நிலையில், டி20 தொடரில் முதல் போட்டி முடிந்திருக்கிறது. 2வது டி20 போட்டி இன்று(ஜூலை 27) நடப்பதாக இருந்தது. ஆனால் இந்திய வீரர் க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா உறுதியானதால், இந்த போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டானும் இலங்கைக்கு எதிராக 15 விக்கெட்டுகளை(8 இன்னிங்ஸ்) வீழ்த்தியுள்ளார். எனவே இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், இலங்கைக்கு எதிராக டி20யில் அதிக(16) விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார்.

வெஸ்ட் இண்டீஸின் ட்வைன் பிராவோ, தென்னாப்பிரிக்கா ஸ்பின்னர் இம்ரான் தாஹிர், பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் சயீத் அஜ்மல், ஷாஹித் அஃப்ரிடி மற்றும் ஆஸி., ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா ஆகியோர் இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் தலா 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 அன்கேப்டு இந்திய வீரர்கள்..! லட்டு போல் தூக்கிய சிஎஸ்கே!
சிஎஸ்கே தூக்கி எறிந்த வீரருக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.18 கோடியை தட்டித்தூக்கிய யார்க்கர் மன்னன்!