காணக்கிடைக்காத சம்பவத்தின் அரிய வீடியோ.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா வில்லியம்சன் - முன்ரோ பண்ண முரட்டு சம்பவம்

Published : Jun 23, 2019, 12:37 PM IST
காணக்கிடைக்காத சம்பவத்தின் அரிய வீடியோ.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா வில்லியம்சன் - முன்ரோ பண்ண முரட்டு சம்பவம்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அரிய சம்பவம் ஒன்று நடந்தது.   

வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அரிய சம்பவம் ஒன்று நடந்தது. 

மான்செஸ்டரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 291 ரன்கள் அடித்தது. 292 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல், ஹெட்மயர், பிராத்வெயிட்டை தவிர யாருமே சரியாக ஆடவில்லை. அரைசதம் அடித்த ஹெட்மயரும் கெய்லும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை சுமந்த பிராத்வெயிட், தனி ஒருவனாக போராடி சதமடித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்ற பிராத்வெயிட், கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, 286 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அரிய சம்பவம் ஒன்று நடந்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கப்டில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததை அடுத்து, களத்திற்கு வந்த வில்லியம்சன், இரண்டாவது பந்தை மிட் ஆஃப் திசைக்கும் எக்ஸ்ட்ரா கவர் திசைக்கும் இடையே அடித்தார். அந்த பந்தை விரட்டிச்சென்ற பிராத்வெயிட், பந்து பவுண்டரி லைனை நெருங்குவதற்கு முன்னதாக பிடிக்க நினைத்து டைவ் அடித்தார். ஆனால் டைவ் அடித்தும் பந்தை பிடிக்க முடியாமல் விட்டார். இதையடுத்து அவருக்கு பின்னால் ஓடிவந்த லெவிஸ் பந்தை பிடித்து எறிந்தார். 

இதற்கிடையே அவர்கள் பந்தை பிடித்து எறிய நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதை அடுத்து, வில்லியம்சனும் முன்ரோவும் இணைந்து 4 ரன்களை ஓடியே எடுத்தனர். 4 ரன்களை ஓடி எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.  கிரிக்கெட் வரலாற்றில் இதெல்லாம் ஒரு அரிய சம்பவம். அந்த அரிய சம்பவத்தின் வீடியோ இதோ.. 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!
டி20 உலகக் கோப்பைக்கு கடப்பாரை டீமை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. சிக்சர் மழைக்கு ரெடியா?