ரிஷப் பண்டிற்காக டெல்லி போட்டியை பார்க்கலாம் – டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கியமான 5 விஷயங்கள் என்னென்ன?

By Rsiva kumarFirst Published Mar 19, 2024, 11:57 AM IST
Highlights

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று ரிஷப் பண்ட்.

இந்தியாவில் வரும் 22 ஆம் தேதி ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் சிறப்பாக தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் ஒவ்வொரு அணியும் பலம் வாய்ந்த அணியாக தங்களை முன்னிலைப்படுத்தி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

டெல்லி போட்டி:

மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் போது டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போடி சண்டிகரில் நடைபெறுகிறது. வரும் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி ரன்னர் அப் 2020:

ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத டெல்லி, ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில், மும்பை வெற்றி பெற்று சாம்பியனானது.

ரிஷப் பண்ட்:

கடந்த 2022 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இடம் பெறாத ரிஷப் பண்ட் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கார் விபத்திற்கு பிறகு ஒரு போட்டியில் கூட ரிஷப் பண்ட் இடம் பெற்று விளையாடவில்லை. இது தான் அவரது முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் 98 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ரிஷப பண்ட், 2838 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 15 அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும். மேலும், அதிகபட்சமாக 128* ரன்கள் எடுத்துள்ளார்.

டேவிட் வார்னர்:

டெல்லி கேபிடல்ஸ் அணியின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் யார் என்றால், அது டேவிட் வார்னர் தான். கடந்த சீசனில் வார்னர் தலைமையிலான டெல்லி அணி விளையாடிய 14 போட்டிகளில் 5ல் வெற்றியும், 9ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பெற்று வெளியேறியது. இந்த தொடரில் மட்டும் வார்னர், 516 ரன்கள் எடுத்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வார்னர், 2022ல் 12 போட்டிகளில் 432 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 92* ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஒரு கேப்டனாக வார்னர் விளையாடிய 14 போட்டிகளில் 6 அரைசதங்கள் உள்பட 516 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 86 ரன்கள் ஆகும்.

டெல்லிக்கு விக்கெட் கீப்பர் யார்?

விக்கெட் கீப்பருக்கான ரேஸில் ஷாய் ஹோப் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப் ஆகியோருடன் தற்போது ரிஷப் பண்ட்டும் இணைந்திருக்கிறார். எனினும் உடல் தகுதி காரணமாக ரிஷப் பண்ட் கீப்பர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த ரேஸில் பெங்கால் வீரர் அபிஷேக் போரேலும் இருக்கிறார். ஆனால், கடந்த சீசனில் அவர் சரிவர தனது விக்கெட் கீப்பிங் பணியை செய்யவில்லை.

நியூ ஹோம் கிரவுண்ட்:

லோக்சபா தேர்தல் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் தனது முதல் 2 உள்ளூர் போட்டிகளை விசாகப்பட்டினம் மைதானத்தில் விளையாடுகிறது. டெல்லியைப் பொறுத்த வரையில் ஹோம் மைதானம சாதகமாக இருந்ததில்லை. இதுவரையில் விளையாடிய 77 போட்டிகளில் 33 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 43 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. தற்போது பண்ட் தலைமையிலான டெல்லி அணியானது விசாகப்பட்டினம் மைதானத்திற்கு ஏற்ற தங்களை தயார்படுத்திக் கொண்டு விளையாடி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்வி ஷா:

கடந்த சில சீசன்களாக சிறப்பாக விளையாடாத பிரித்வி ஷா அண்மையில் நடந்து முடிந்த ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்திருக்கிறார். மும்பை அணிக்காக விளையாடிய ஷா, 394 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிகபட்சமாக 159 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலமாக இந்த சீசனில் தனது சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என்று அவர் மீது டெல்லி நம்பிக்கை வைத்திருக்கிறது. கடந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா, ஒரு அரைசதம் உள்பட மொத்தமாக 106 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 54 ரன்கள் அடங்கும்.

டெல்லி விளையாடும் போட்டிகள்:

மார்ச் 23 – பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் – சண்டிகர் - 3.30 பிற்பகல்

மார்ச் 28 – ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் – ஜெய்ப்பூர் – 7.30 இரவு

மார்ச் 31 – சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 7.30 இரவு

ஏப்ரல் 03 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 7.30 இரவு

ஏப்ரல் 07 – மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் – மும்பை – பிற்பகல் 3.30 மணி

click me!