அக்ரம் சொன்னாரு.. அஃப்ரிடி அசத்துனாரு.. நியூசிலாந்தை தரமான சம்பவம் செய்ததன் சுவாரஸ்ய பின்னணி

By karthikeyan VFirst Published Jun 29, 2019, 1:55 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் சொஹைலும் ஷாஹீன் அஃப்ரிடியும் அபாரமாக ஆடிவருவது அந்த அணிக்கு கூடுதல் பலம். முக்கியமான நேரத்தில் அந்த அணி வெகுண்டெழுந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் சீனியர் மற்றும் அனுபவ ஃபாஸ்ட் பவுலர்களான முகமது அமீர் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய இருவர் மட்டுமே எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டிவந்த நிலையில், இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி நியூசிலாந்துக்கு எதிராக அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 

உலக கோப்பை தொடரை படுமோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் மீண்டெழுந்து அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதன்பின்னர் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக  தோல்வியை தழுவியது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அள்ளி தூற்றினர். அதன்பின்னர் வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி வென்றது. இந்த வெற்றிகளை அடுத்து பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் சொஹைலும் ஷாஹீன் அஃப்ரிடியும் அபாரமாக ஆடிவருவது அந்த அணிக்கு கூடுதல் பலம். முக்கியமான நேரத்தில் அந்த அணி வெகுண்டெழுந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் சீனியர் மற்றும் அனுபவ ஃபாஸ்ட் பவுலர்களான முகமது அமீர் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய இருவர் மட்டுமே எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டிவந்த நிலையில், இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி நியூசிலாந்துக்கு எதிராக அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முன்ரோ, டெய்லர், லேதம் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதற்கு முன்னர் அவர் வீசிய பவுலிங்கை விட நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அபாரமாக வீசினார். அவரது பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். 

அந்த போட்டிக்கு அடுத்து ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. அதில், நியூசிலாந்து போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் முகமது அமீர் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடிக்கு வாசிம் அக்ரம் ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார். எனவே கண்டிப்பாக அக்ரமின் ஆலோசனைக்கு பின்னர் தான் ஷாஹீன் அஃப்ரிடி பவுலிங்கில் மிரட்டியுள்ளார் என்று தெரிந்தது. 

இந்நிலையில், அமீர் மற்றும் அஃப்ரிடிக்கு வழங்கிய ஆலோசனை குறித்து அக்ரம் பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், அமீர் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி இருவரிடமும் சரியான லெந்த்தில் வீசுமாறும் வில்லியம்சனுக்கான ஃபீல்டிங் செட்டப் குறித்தும் ஆலோசனை வழங்கினேன். ஷாஹீன் அஃப்ரிடி ரொம்ப ஷார்ட் பிட்ச்சாக வீசிவந்தார். எனவே அவரிடம் இன்னும் கொஞ்சம் ஃபுல் லெந்த்தாக வீசுமாறு அறிவுறுத்தினேன். அதை அவர் சரியாக செய்தார் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 
 

click me!