அவங்க 2 பேருமே அணியில் வேண்டாம்.. இந்த 11 பேரோட இறங்குங்க.. விவிஎஸ் லட்சுமணன் அதிரடி

By karthikeyan VFirst Published May 30, 2019, 1:39 PM IST
Highlights

பழைய தோனியை நினைவூட்டும் தோனியின் எழுச்சி பேட்டிங், மிடில் ஆர்டருக்கு வலு சேர்த்துள்ளது. ராகுலும் சிறப்பாக ஆடினார். நான்காம் வரிசைக்கு விஜய் சங்கருடனான போட்டியில் தனக்கான இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார் கேஎல் ராகுல். 

உலக கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், பவுலிங் அபாரமாக உள்ளது. மிடில் ஆர்டர் பேட்டிங் மட்டும் சிக்கலாக இருந்தது. வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் தோனி மற்றும் ராகுலின் அதிரடி சதத்தால் இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. 

பழைய தோனியை நினைவூட்டும் தோனியின் எழுச்சி பேட்டிங், மிடில் ஆர்டருக்கு வலு சேர்த்துள்ளது. ராகுலும் சிறப்பாக ஆடினார். நான்காம் வரிசைக்கு விஜய் சங்கருடனான போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார் கேஎல் ராகுல். 

உலக கோப்பை தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ஜூன் 5ம் தேதி இந்த போட்டி நடக்க உள்ளது. முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்குவது அவசியம். எனவே இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரை தொடங்கும் முனைப்பில் உள்ளது. 

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ஆடும் அணி குறித்து லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார். எந்த 11 வீரர்கள் ஆடலாம் என்ற தனது கருத்தையும் தெரிவித்துள்ளார். ரோஹித், தவான், கோலி என டாப் 3 வீரர்கள் உறுதி செய்யப்பட்ட விஷயம். நான்காம் வரிசையில் ராகுலை தேர்வு செய்துள்ளார் லட்சுமணன். ஐந்தாம் வரிசையில் தோனியையும் 6ம் வரிசையில் ஹர்திக் பாண்டியாவையும் தேர்வு செய்துள்ளார். பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகியோரை பவுலர்களாக தேர்வு செய்துள்ளார். பவுலர்களும் உறுதியான விஷயம்தான். 

கேதர் ஜாதவை லட்சுமணன் ஆடும் லெவனிற்கு தேர்வு செய்யவில்லை. கேதருக்கு பதிலாக ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார் ஜடேஜா. மேலும் இங்கிலாந்தில் ஜடேஜாவின் பேட்டிங் ரெக்கார்டு நன்றாக உள்ளது. ஒரு நல்ல ஆல்ரவுண்டர் என்ற வகையில் ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார் லட்சுமணன். 

விஜய் சங்கர், கேதர் ஜாதவ் ஆகிய இருவரையும் லட்சுமணன் தனது அணியில் எடுக்கவில்லை. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டிக்கு லட்சுமணன் தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப், ஷமி, சாஹல், பும்ரா. 
 

click me!