இந்த பிரச்னையை மட்டும் சரி செய்ங்க.. இங்கி.,யில் பட்டைய கிளப்பிருவீங்க! முக்கியமான வீரருக்கு லக்‌ஷ்மண் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Aug 2, 2021, 5:30 PM IST
Highlights

இங்கிலாந்தில் அஜிங்க்யா ரஹானே எப்படி ஆடவேண்டும் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் அறிவுரை கூறியுள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதல் போட்டி நாட்டிங்காமில் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. கடந்த 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இம்முறை டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் அணியின் சீனியர் வீரர்கள் நன்றாக பேட்டிங் ஆடி பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும். அந்தவகையில், மிடில் ஆர்டரில் அணியின் சீனியர் வீரரும், துணை கேப்டனுமான அஜிங்க்யா ரஹானே சிறப்பாக ஆடியாக வேண்டும் என்று லக்‌ஷ்மண் கூறியுள்ளார்.

ரஹானே குறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், இந்திய பேட்டிங் ஆர்டரில் முக்கியமான வீரர் அஜிங்க்யா ரஹானே. குறிப்பாக வெளிநாட்டு தொடர்களில் ரஹானே மிக மிக முக்கியமான வீரர்.  லார்ட்ஸில் அவர் அடித்த சதம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதேபோல ஆஸ்திரேலியாவில் மெல்போர்னிலும், தென்னாப்பிரிக்காவிலும் ரஹானே சதமடித்த போதெல்லாம் இந்திய அணி வென்றிருக்கிறது. 

ரஹானே அவரது கேம் பிளானில் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சரிசெய்து கொள்ள வேண்டும். ஷார்ட் பிட்ச் பந்துகளை எப்படி ஆட வேண்டும் என்று அவருக்கு தெளிவான கேம் பிளான் வேண்டும். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும், நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலும், ஷார்ட் பிட்ச் பந்துகளில் தான் வீழ்ந்தார். எனவே அந்த விஷயத்தில் அவருக்கு தெளிவான கேம் பிளான் தேவை என்று லக்‌ஷ்மண் அறிவுறுத்தியுள்ளார்.
 

click me!