ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா தரமான சம்பவம் பண்ண கோலி

By karthikeyan VFirst Published Aug 11, 2019, 8:45 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி தன் ரன் குவிப்பையும் சாதனையையும் தொடர்ந்துவருகிறார்.
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி தன் ரன் குவிப்பை தொடர்ந்துவருகிறார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித்தும் தவானும் களமிறங்கினர். தவான், கோட்ரெல் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த கோலி, வழக்கம்போலவே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரு தரமான சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை செட் செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத்(1930 ரன்கள்) இருந்தார். அந்த சாதனையை முறியடித்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இந்த போட்டிக்கு முன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கோலி 1912 ரன்கள் குவித்திருந்தார். இன்றைய போட்டியில் 19 ரன்கள் அடித்தபோதே ஜாவேத் மியான்தத்தின் சாதனையை முறியடித்துவிட்டார்.
 

click me!