யப்பா கோலி, 2004ல் சச்சின் ஆடுன மாதிரிலாம் நீ ஆடவேண்டாம்!ஆனால் இதை மட்டுமாவது பண்ணுப்பா-பேட்டிங் கோச் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Dec 30, 2021, 5:18 PM IST
Highlights

விராட் கோலி கவர் டிரைவ் ஆடமுயன்று தொடர்ச்சியாக ஆட்டமிழந்துவரும் நிலையில், அவருக்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் ஒரு சிறந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின்  தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தகர்த்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பெரிய ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.

கடைசியாக 2019ம் ஆண்டு சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் 2020 மற்றும் 2021 ஆகிய 2 ஆண்டுகளிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து, இப்போதுதான் முதல் முறையாக தொடர்ச்சியாக 2 ஆண்டுகள், ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்திருக்கிறார்.

விராட் கோலி பெரிய ஸ்கோர் அடிக்காமல் அவுட்டாவதற்கு முக்கிய காரணம் செய்த தவறையே திரும்பத்திரும்ப செய்வதுதான். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே ஆறாவது, ஏழாவது ஸ்டம்ப் லைனில் செல்லும் பந்துகளை கவர் டிரைவ் ஆடமுயன்றுதான் அவுட்டாகிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் முழுவதுமாக அப்படித்தான் அவுட்டானார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு மிகவும் வெளியே சென்ற பந்தை விரட்டிச்சென்று அடித்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி ஆட்டமிழந்த விதம் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து விராட் கோலியை அனைவரும் 2004 சிட்னி டெஸ்ட்டில் சச்சின் ஆடியதை போல கவர் டிரைவே அடிக்காமல் ஆடுமாறு அறிவுறுத்துகின்றனர். சச்சின் டெண்டுல்கர் 2004 ஆஸி., சுற்றுப்பயணம் மற்றும் அதற்கு முந்தைய சில போட்டிகளில் கவர் டிரைவ் ஆடியே தொடர்ந்து அவுட்டாகி கொண்டிருந்தார். இதையடுத்து, சிட்னியில் நடந்த டெஸ்ட்டில் கவர் டிரைவே ஆடக்கூடாது என்று முடிவெடுத்த சச்சின் டெண்டுல்கர், அந்த போட்டி முழுவதும் ஒரு கவர் டிரைவ் கூட ஆடாமல் 241 ரன்களை குவித்தார். எனவே அதே மாதிரி விராட் கோலி கவர் டிரைவ் அடிக்காமல் ஆட முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வலுத்தன.

இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், விராட் கோலி கவர் டிரைவே ஆடாமல் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. கவர் டிரைவில் தான் அவர் அதிகமான ஸ்கோர் செய்திருக்கிறார். எனவே கவர் டிரைவ் ஆடலாம். ஆனால் எந்த பந்தை ஆடவேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருந்தால் போதும் என்றார் விக்ரம் ரத்தோர்.
 

click me!