மெல்போர்ன் ஆடுகளத்தின் அச்சுறுத்தலால் கைவிடப்பட்ட போட்டி.. பாக்ஸிங் டே டெஸ்ட்டின் கதி..?

By karthikeyan VFirst Published Dec 8, 2019, 11:19 AM IST
Highlights

மெல்போர்ன் ஆடுகளம் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் மிகவும் மோசமாக இருந்ததால், ஷெஃபில்டு ஷீல்டு தொடரில் விக்டோரியா மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி, முதல் நாள் ஆட்டத்தில் பாதியுடன் நிறுத்தப்பட்ட நிலையில், அத்துடன் கைவிடப்பட்டுள்ளது. 
 

ஆஸ்திரேலியாவில் ஷேஃபில்டு ஷீல்டு முதல் தர போட்டிகள் நடந்துவருகின்றன. விக்டோரியா மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் விக்டோரியா அணி, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இந்த போட்டி தொடங்கியதிலிருந்தே பந்துகள் தாறுமாறாக எகிறின. பொதுவாகவே ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும். ஆனால் மெல்போர்னில் நடக்கும் இந்த போட்டியில் பெரும்பாலான பந்துகள் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது. பந்துகளை கணிக்க முடியாத அளவிற்கு தாறுமாறாக எகிறின. 

பீட்டர் சிடிலின் பந்தில், ஷான் மார்ஷுக்கு முகத்தில் அடிபட்டது. அதேபோல மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹெல்மெட்டிலும் நெஞ்சின் பக்கவாட்டுப்பகுதியிலும் அடி வாங்கினார். அதேபோல தொடர்ச்சியாக பந்துகள் தாறுமாறாக எகிறியதால் களத்தில் இருந்த ஸ்டோய்னிஸும் க்ரீனும் தங்களது உடம்பில் கண்டபடி அடி வாங்கினார். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்ததால், முதல் நாள் ஆட்டம் 39.4 ஓவரிலேயே முடித்து கொள்ளப்பட்டது. பந்துகள் தாறுமாறாக எகிறிய வீடியோ இதோ.. 

அதன்பின்னர் ஆடுகளம் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அதில் ஆடுவது பாதுகாப்பானது இல்லை என்பதால் ஆட்டம் கைவிடப்பட்டது. நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடவுள்ளது. அந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, மெல்போர்னில் நடக்கும் பாரம்பரியமான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி. இந்நிலையில், மெல்போர்ன் ஆடுகளம் அச்சுறுத்தலாக இருப்பதால் அந்த போட்டி குறித்த சந்தேகம் எழுந்தது. 

ஆனால் சர்வதேச போட்டிக்கு ஆடுகளம் வேறு மாதிரி தயாரிக்கப்படும் என்பதால் அந்த போட்டி நடப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!