கடந்த பத்தாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட சர்வதேச வீரர் யார்..? ரசிகரின் கேள்விக்கு டாம் மூடியின் நறுக் பதில்

By karthikeyan VFirst Published Apr 6, 2020, 10:30 PM IST
Highlights

கடந்த பத்தாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் டாம் மூடி நியூசிலாந்து வீரரின் பெயரை தெரிவித்தார்.
 

உலகம் முழுதும் கொரோனாவின் தாக்கத்தால் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதால் வீடுகளில் முடங்கியுள்ளனர். பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. 

எனவே கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே வீடுகளில் முடங்கியுள்ள முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிவருகின்றனர்.

அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடியிடம், ரசிகர் ஒருவர், கடந்த பத்தாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் யார் என்று கேள்வியெழுப்பினார். 

அதற்கு பதிலளித்த டாம் மூடி, ரோஸ் டெய்லர் மிகத்திறமையான வீரர். ஆனால் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன். ஆனால் அவர் அதற்கு தகுதியானவர் என்று டாம் மூடி தெரிவித்தார்.

 

Ross Taylor doesn’t get the recognition he deserves imo

— Tom Moody (@TomMoodyCricket)

நியூசிலாந்து ஒருநாள் அணியில் 2006ம் ஆண்டு அறிமுகமான ரோஸ் டெய்லர், 2007ல் டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தார். இதுவரை நியூசிலாந்து அணிக்காக 231 ஒருநாள் போட்டிகளிலும் 101 டெஸ்ட் போட்டிகளிலும் 100 டி20 போட்டிகளிலும் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர் ரோஸ் டெய்லர். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றுவிதமான ஃபார்மட்டிலும் 100 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ள முதல் வீரர் மட்டுமல்லாமல் ஒரே வீரர்(இதுவரை) என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடும் டெய்லர், டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர்.
 

click me!