New Zealand vs Bangladesh: 2வது டெஸ்ட்டில் வெறித்தனமா விளையாடும் நியூசி.,! 200ஐ நெருங்கும் லேதம்.. கான்வே 99*

By karthikeyan VFirst Published Jan 9, 2022, 12:39 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் டாம் லேதம் மற்றும் கான்வே ஆகிய இருவரும் அபாரமாக ஆடிவருகின்றனர்.
 

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் முதல் முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

முதல் டெஸ்ட்டில் அடைந்த வரலாற்று படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கினர் நியூசிலாந்து வீரர்கள். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் வில் யங் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 148 ரன்களை சேர்த்து கொடுத்தனர். அரைசதம் அடித்த வில் யங் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான டாம் லேதம் சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த டெவான் கான்வேவும் சிறப்பாக ஆடிவருகிறார். சதத்திற்கு பின்னரும் அருமையாக ஆடிவரும் டாம் லேதம் 150 ரன்களை கடந்தார். அதன்பின்னரும் சிறப்பாக ஆடிவருகிறார். அவருடன் இணைந்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அபாரமாக ஆடிவரும் கான்வே 99 ரன்கள் அடித்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை குவித்துள்ளது. அபாரமாக விளையாடிவரும் டாம் லேதம் 186 ரன்களுடன் களத்தில் உள்ளார். இரட்டை சதத்தை நெருங்கிய அவர், நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரட்டை சதத்தை எட்டிவிடுவார். கான்வே சதத்தை எட்ட ஒரு ரன்னே தேவை. எனவே நியூசிலாந்து அணி இந்த போட்டியில் மிகப்பெரிய ஸ்கோரை அடிப்பது உறுதி.
 

click me!