ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை தனது சுண்டுவிரலால் ஆட்டி வைத்திருந்தவர் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன். பொருளார் பதவியில் இருந்து துவங்கிய பிசிசிஐ தலைவர் வரை உயர்ந்தார். ஒரு கட்டத்தில் ஐசிசி தலைவராகவும் சீனிவாசன் பொறுப்பேற்றார். ஐபிஎல் போட்டிகளின் இறுதிப் போட்டியை மும்பைக்கு வெளியே கொண்டு வந்ததில் இவரது பங்கு மிக முக்கியம்.
ஒரு பெண் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிவிட்டதாக பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் அதன் பின்னணி உண்மை மறைக்கப்பட்டு வருகிறது.
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை தனது சுண்டுவிரலால் ஆட்டி வைத்திருந்தவர் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன். பொருளார் பதவியில் இருந்து துவங்கிய பிசிசிஐ தலைவர் வரை உயர்ந்தார். ஒரு கட்டத்தில் ஐசிசி தலைவராகவும் சீனிவாசன் பொறுப்பேற்றார். ஐபிஎல் போட்டிகளின் இறுதிப் போட்டியை மும்பைக்கு வெளியே கொண்டு வந்ததில் இவரது பங்கு மிக முக்கியம்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகமாக மும்பை செயல்பட்டு வந்த நிலையில் அதனை சென்னைக்கு மாற்றியதற்கு சொந்தக்காரர் சீனிவாசன். இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சென்னைவாசியான சீனிவாசனின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நிலையில் தான் சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது.சென்னை அணியின் வழிகாட்டும் நபராக இருந்த குருநாத் என்பவர் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. அந்த குருநாத் வேறு யாரும் இல்லை சென்னை ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும் பிசிசிஐ தலைவராகவும் இருந்த சீனிவாசனின் மருமகன். ஆம் தற்போது கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வாகியிருக்கும் ரூபாவின் கணவர் தான் குருநாத்.
இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று சென்னை அணி இரண்டு ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு காரணம் குருநாத் தான். இப்படி சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பிறகு குருநாத் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் தலையிட தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் நேரடியாக சென்னை அணியின் நிர்வாகத்தில் தலையிடவில்லை.
அதே சமயம் அவர் மறைமுகமாக சென்னை அணியை இயக்கி வருவதாக ஒரு புகார் உள்ளது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த பதவியை அடையத்தான் குருநாத் பல ஆண்டுகளாக முயற்சி செய்திருந்தார். ஆனால் சூதாட்ட தண்டனையால் அவரால் அந்த பதவிக்கு வரமுடியவில்லை. இந்த நிலையில் தான் அவரது மனைவி தலைவராகியுள்ளார்.
எனவே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் இனி குருநாத்தின் தலையீடு இருக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஒரு அணி இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்க காரணமாக இருந்த நபரின் மனைவிக்கு தலைவர் பதவி என்பது தற்போது பிரச்சனையாகவில்லை என்றாலும் கூடிய சீக்கிரத்தில் பிரச்சனை ஆகும் என்கிறார்கள்.