அவரோட பதவி காலியாகுறது கன்ஃபார்ம்.. அடுத்தது யார்..?

Published : Aug 19, 2019, 04:20 PM IST
அவரோட பதவி காலியாகுறது கன்ஃபார்ம்.. அடுத்தது யார்..?

சுருக்கம்

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் ஆகியோரை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யவுள்ளது. 

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் நடப்பு வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து ஏற்கனவே பிசிசிஐ, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பெற்றது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிகு 2000 விண்ணப்பங்கள் வந்தன. அதிலிருந்து டாம் மூடி, ரவி சாஸ்திரி, மைக் ஹெசன், ராபின் சிங், ராஜ்பூட் மற்றும் ஃபில் சிம்மன்ஸ் ஆகிய 6 பேரும் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர். அவர்களில் ஃபில் சிம்மன்ஸ் போட்டியிலிருந்து விலகியதை அடுத்து, எஞ்சிய 5 பேரிடம் கிரிக்கெட்ல் ஆலோசனைக்குழு நேர்காணல் நடத்தி, மீண்டும் ரவி சாஸ்திரியையே தலைமை பயிற்சியாளராக நியமித்தது. 

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் ஆகியோரை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும். பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் மாற்றப்பட வாய்ப்பில்லை. இந்திய அணியின் பவுலிங் யூனிட் கடந்த 2 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்து எதிரணிகளின் பேட்டிங் ஆர்டரின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. பவுலிங் யூனிட் 2 ஆண்டுகளில் அதீத வளர்ச்சியடைந்திருப்பதால் பவுலிங் கோச் பரத் அருண் மாற்றப்படுவதற்கான வாய்ப்பில்லை. அவரே பவுலிங் பயிற்சியாளராக தொடர்வார் என்று தெரிகிறது. 

ஆனால் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கண்டிப்பாக மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு 2 ஆண்டுகளாக தீர்வு காணமுடியவில்லை. அதன் எதிரொலியாக இந்திய அணி உலக கோப்பையில் தோற்க நேரிட்டது. பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விக்ரம் ரத்தோர், பிரவீன் ஆம்ரே, ஜோனாதன் ட்ராட், திலன் சமரவீரா ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் விக்ரம் ரத்தோர் பேட்டிங் பயிற்சியாளர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. சஞ்சய் பங்கார் கண்டிப்பாக அந்த பதவியிலிருந்து தூக்கியடிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

Lungi Ngidi Injury: தலையில் அடிபட்டு மருத்துவமனையில் லுங்கி இங்கிடி... இப்போது எப்படி இருக்கிறார்..?
Vaibhav Sooryavanshi: 15 பந்தில் அரைசதம், 36 பந்தில் சதம்... 5 மெகா சாதனைகளை உடைத்த இளம் புயல்..!