சாரி “தல” உங்களுக்கு இடம் இல்ல.. சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் லெவன்..!

By karthikeyan VFirst Published Jul 10, 2021, 7:25 PM IST
Highlights

சூர்யகுமார் யாதவ் தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

இந்திய அணியில் வளர்ந்துவரும் வீரரான சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லிலும் உள்நாட்டு போட்டிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக ஆடிவருபவர். இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் முக்கியமான வீரராக திகழும் சூர்யகுமார் யாதவ், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், தனது ஐபிஎல் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல்லின் ஆல்டைம் சிறந்த தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரையும் தேர்வு செய்த சூர்யகுமார் யாதவ், 3ம் வரிசையில் விராட் கோலியையும் 4ம் வரிசையில் தன்னையும் தேர்வு செய்துள்ளார்.

5ம் வரிசையில் மிஸ்டர் 360 டிவில்லியர்ஸையும், அதன்பின்னர் அதிரடி ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவரையும், ஸ்பின்னர்களாக ஸ்பின் ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் ஷமியையும் தேர்வு செய்தார் சூர்யகுமார் யாதவ்.

சூர்யகுமார் யாதவின் ஆல்டைம் ஐபிஎல் அணியில் 3 முறை சிஎஸ்கேவிற்கு கோப்பையை வென்றுகொடுத்த ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனும் சிறந்த ஃபினிஷருமான தோனிக்கு இடம் இல்லை.

சூர்யகுமார் யாதவின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

ரோஹித் சர்மா, ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ், ஹர்திக் பாண்டியா, ஆண்ட்ரே ரசல், ரவீந்திர ஜடேஜா, ரஷீத் கான், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!