SRH vs PBKS: அபிஷேக் ஷர்மா, ஷெஃபெர்டு அதிரடி பேட்டிங்.! பஞ்சாப் கிங்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த சன்ரைசர்ஸ்

By karthikeyan VFirst Published May 22, 2022, 9:28 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில்  ரன்கள் அடித்து,  ரன்கள் என்ற சவாலான இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 15வது சீசனில் இன்று நடந்துவரும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டதால் இன்று நடக்கும் போட்டி புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, ப்ரியம் கர்க், ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெஃபெர்டு, வாஷிங்டன் சுந்தர், ஜெகதீஷா சுஜித், புவனேஷ்வர் குமார் (கேப்டன்), ஃபஸால்ஹக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷாருகான், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் ப்ரார், நேதன் எல்லிஸ், ப்ரெரக் மன்கத், ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரியம் கர்க் 4 ரன்னில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா அடித்து ஆடி 43ரன்கள் அடித்தார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். மார்க்ரம் 21 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் வாஷிங்டன் சுந்தர் 25ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார். ரொமாரியோ ஷெஃபெர்டு அதிரடியாக ஆடி 15 பந்தில் 26 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் 156 ரன்கள் அடித்து, 157 ரன்கள் என்ற சவாலான இலக்கை பஞ்சாப்கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ்.
 

click me!